உள்ளூர் செய்திகள்
மீன்பிடிக்க சென்றபோது கூவம் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
- சவுந்தரராஜன் அங்குள்ள கூவம் ஆற்றில் மீன்பிடிக்க சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி அவர் இறந்தார்.
- போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(வயது52). இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் சவுந்தரராஜன் அங்குள்ள கூவம் ஆற்றில் மீன்பிடிக்க சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார். வெள்ளவேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.