உள்ளூர் செய்திகள்
கூவத்தூர் அருகே ஆந்திரா வாலிபர் தற்கொலை
- பழைய நடுக்குப்பம் பகுதியில் உள்ள மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
ஆந்திரா மாநிலம் உக்காட்டுபள்ளி பகுதியை சேர்ந்த வெங்கடரமணா (வயது.33). இவர் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் பழைய நடுக்குப்பம் பகுதியில் உள்ள மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.