உள்ளூர் செய்திகள்
தனியார் தொழிற்சாலை ஊழியரிடம் செல்போன் பறிப்பு
- செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிராஜன்.
- மாரிராஜன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிராஜன் (வயது 30). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் காட்டாங்கொளத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து மாரிராஜன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் வந்த 3 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.