உள்ளூர் செய்திகள்

கன்னிகைபேர் அருகே தனியார் நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல்

Published On 2023-04-02 17:41 IST   |   Update On 2023-04-02 17:41:00 IST
  • கண்ணன் தொழிற்சாலையில் வேலையில் இருந்தபோது ராஜேஷ் என்பவர் போன் செய்து பழைய இரும்பு பொருட்கள் எடுப்பதை நிறுத்தி விடுங்கள்.
  • கண்ணன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம், நாராவாரி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). இவர் கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கண்ணனின் முதலாளி பாரதிராஜா கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக பழைய இரும்பு பொருட்களை எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கண்ணன் தொழிற்சாலையில் வேலையில் இருந்தபோது செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் போன் செய்து கன்னிகைபேர் கிராமத்தில் பழைய இரும்பு பொருட்கள் எடுப்பதை நிறுத்தி விடுங்கள். இல்லை என்றால் உன்னையும் உனது முதலாளி பாரதிராஜாவையும் தீர்த்து கட்டி விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கண்ணன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News