காஞ்சிபுரம் அருகே நிதி நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு
- ராகுல்ராஜ் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் பிரபல தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த ராகுல்ராஜ் (20) தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தங்களின் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்த புள்ளலூர் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரை சந்திப்பதற்காக பரந்தூர் சென்று விட்டு அங்கிருந்து தனது நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார்.
புள்ளலூரில் வாடிக்கையாளர் இல்லாததால் மீண்டும் பரந்தூர் வந்து நண்பரை விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் சிறுவாக்கம் பகுதியில் வழிமறித்து தாக்கிவிட்டு அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு சென்றனர்.
இதுகுறித்து ராகுல்ராஜ் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.