உள்ளூர் செய்திகள்

கலசப்பாக்கம் அருகே மரத்தில் பைக் மோதி போலீஸ்காரர் பலி

Published On 2023-02-06 13:15 IST   |   Update On 2023-02-06 13:15:00 IST
  • பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது போலீஸ்காரர் இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை:

போளூர் அடுத்த களம்பூர் குமாரசாமி காலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவா (வயது29). பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் தேவா திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக சென்றார். பின்னர் பணி முடிந்து இன்று அதிகாலை வீட்டிற்கு செல்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து களம்பூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு அருகே அதிகாலை 4 மணி அளவில் வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த தேவா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தேவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது போலீஸ்காரர் இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News