உள்ளூர் செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள கலவை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கலவை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னை அண்ணாநகரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். இன்று காலை திரும்பி வந்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.