உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
பெரியபாளையம் அருகே பாலம்கட்டும் பணி ஆய்வு
- 2 சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையத்தில் இருந்து திருநின்றவூர் வழியாக கொரட்டூர் வரையில் மாநில நெடுஞ்சாலையில் வடமதுரை அருகே ரூ. 50 லட்சம் செலவில் 2 சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை திருவள்ளூர் கோட்ட பொறியாளர் விஸ்வநாதன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் தஸ்வின் பெர்னாண்டோ,உதவி பொறியாளர் பிரசாத்,சாலை ஆய்வாளர் கோபி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.