உள்ளூர் செய்திகள்

சுதந்திர தின விழா இறுதி ஒத்திகை

Update: 2022-08-13 11:04 GMT
  • கடந்த 6-ந்தேதி முதல் நாள் ஒத்திகையும், 11-ந்தேதி 2-வது நாள் ஒத்திகையும் நடத்தப்பட்டது. இன்று 3-வது மற்றும் இறுதி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
  • சென்னை கோட்டை தலைமை செயலகம் முன்பு உள்ள ராஜாஜி சாலையில் இந்த ஒத்திகை இன்று காலை நடைபெற்றது.

சென்னை:

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 3 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, கடந்த 6-ந்தேதி முதல் நாள் ஒத்திகையும், 11-ந்தேதி 2-வது நாள் ஒத்திகையும் நடத்தப்பட்டது. இன்று 3-வது மற்றும் இறுதி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

சென்னை கோட்டை தலைமை செயலகம் முன்பு உள்ள ராஜாஜி சாலையில் இந்த ஒத்திகை இன்று காலை நடைபெற்றது. இதில் படை வீரர்கள் மற்றும் காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.

சுதந்திர தின விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளையும் வழங்கி கவுரவிக்கிறார். இதுபோன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. ஒத்திகை நிகழ்ச்சியை தொடர்ந்து கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

Tags:    

Similar News