உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே கட்டிமுடிக்கப்பட்ட 2 வாரத்தில் சிமெண்டு பாலத்தில் ஓட்டை- பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-08-02 12:44 IST   |   Update On 2022-08-02 12:44:00 IST
  • கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்றது.
  • சிறிய தரைப்பாலம் கடந்த 2 வாரத்துக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது.

பொன்னேரி:

மீஞ்சூர் ஒன்றியம் தட பெரும்பாக்கம் ஊராட்சி திருவேங்கடபுரத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்றது.

அப்பகுதியில் கழிவு நீர் கால்வாயை இணைக்கும் வகையில் சிறிய தரைப்பாலம் கடந்த 2 வாரத்துக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சிறிய தரைப்பாலத்தில் இருந்த சிமெண்ட்டு பூச்சு உடைந்து ஓட்டை விழுந்தது. கட்டி முடிக்கப்பட்டு 2 வாரத்திலேயே இடிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கட்டுமான பொருட்கள் தரமானதாக இல்லை எனவும், கனரக வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் கட்டப்பட வில்லை எனவும் குற்றம் சாட்டி கிராமமக்கள் அங்கு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் பணி ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இரவோடு இரவாக உடைந்த பகுதியை சீரமைத்தனர்.

Similar News