உள்ளூர் செய்திகள்

அசோக் நகரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 1 ஆண்டு ஜெயில்

Published On 2023-09-23 14:39 IST   |   Update On 2023-09-23 14:39:00 IST
  • கடைக்கு மதுபோதையில் வந்த டைமண்ட் பாபு என்ற வாலிபர் எண்ணெய் சட்டியை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார்.
  • தட்டிக்கேட்ட இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

போரூர்:

சென்னை அசோக் நகர், அடுத்த புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண். அதே பகுதி 3-வது அவென்யூவில் பிளாட்பாரத்தில் "சிக்கன் பக்கோடா" கடை நடத்தி வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 6-ந்தேதி இரவு இவரது கடைக்கு மதுபோதையில் வந்த டைமண்ட் பாபு என்ற வாலிபர் எண்ணெய் சட்டியை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார். இதை தட்டிக்கேட்ட இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

அசோக் நகர் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் டைமண்ட் பாபுவை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு அல்லிகுளம் மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த நிலையில் டைமண்ட் பாபுவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News