உள்ளூர் செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

Published On 2022-08-03 17:02 IST   |   Update On 2022-08-03 17:02:00 IST
  • கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திரவ கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திரவ கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கூடுவாஞ்சேரி அருகே திரவ கஞ்சா விற்று கொண்டிருந்த கோவூர் பகுதியை சேர்ந்த மனோ (வயது 30), மவுலிவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜீவ் சர்மா (29), கொரட்டூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (20), அயனாவரம் பகுதியை சேர்ந்த பாபு (37), ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 850 கிராம் திரவ கஞ்சாவை பறிமுதல் செய்து 4 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்கள் 4 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Similar News