உள்ளூர் செய்திகள்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஜி.கே.வாசன், டி.டி.வி.தினகரன் வாழ்த்து

Published On 2023-05-08 10:36 GMT   |   Update On 2023-05-08 10:36 GMT
  • மாநில அளவில் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் உள்ளிட்ட அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் பெரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள்.
  • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை :

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாண வர்களுக்கு ஜி.கே.வாசன், டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

12-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றதற்கு காரணம் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தான். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி, நன்கு படித்து, தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண்கள் பெற்று, 100க்கு 100 ம் பெற்று படித்த பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

மாநில அளவில் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் உள்ளிட்ட அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் பெரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். மாணவ, மாணவிகளின் கல்விக்கும், கற்றலுக்கும், தேர்ச்சிக்கும் கற்பித்தலை சிறப்பாக மேற்கொண்ட ஆசிரியப்பெருமக்கள் அவர்களுக்கு துணை நின்ற பெற்றோர்களும் பாராட்டுக்குரியவர்கள். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளின் முயற்சி வீண்போகாது. அவர்கள் நம்பிக்கையுடன், மனம் தளராமல் தொடந்து வரும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று மேற்படிப்புக்கு செல்ல வேண்டும். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் அவரவர்களின் விருப்பத்திற்கேற்ற மேற்படிப்பில் சேர்ந்து கல்வியை தொடர்ந்து, வாழ்வில் முன்னேற வேண்டும்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதற்காக மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த வாய்ப்புகளில் வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது. மாணவச்செல்வங்கள் அனைவரது எதிர்காலமும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News