உள்ளூர் செய்திகள்

50 ஆண்டு பழமையான வீடு இடிந்து விழுந்தது- சிறுமி காயம்

Published On 2023-11-25 09:03 GMT   |   Update On 2023-11-25 09:03 GMT
  • கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.
  • கட்டிடம் தானாக இடிந்து விழுந்தது.

ராயபுரம்:

சென்னை ராயபுரம் ஆஞ்சநேயா நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 24). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இது 50 ஆண்டுகாலம் பழமையான கட்டிடம் ஆகும். இந்த வீடு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், இந்த கட்டிடத்தை வருகிற டிசம்பர் மாதம் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அந்த கட்டிடம் முழுவதும் மழைநீரில் ஊறியது. இதனால் நேற்று அந்த கட்டிடம் தானாக இடிந்து விழுந்தது. அப்போது கட்டிடத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு காலில் லேசானம் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி இதுபற்றி ரமேஷ், ராயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடம் முழுவதையும் இடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி நேரில் சென்று சபவ இடத்தை பார்வையிட்டார்.

Tags:    

Similar News