உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் இலவச விமான பயணம்

Published On 2022-08-03 17:10 IST   |   Update On 2022-08-03 17:10:00 IST
  • உலக அனுபவம் பெறும் வகையில் விமான பயணம் அழைத்து செல்வது வழக்கம்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் ஆண்டுதோறும் 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவிகளை பள்ளியின் சார்பில் இலவசமாக உலக அனுபவம் பெறும் வகையில் விமான பயணம் அழைத்து செல்வது வழக்கம், இந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 இடங்களை பெற்ற அமுதன், தாவூத் மார்வா, மோகனபிரியா ஆகிய 3 மாணவ- மாணவிகளை பள்ளியின் சார்பில் இலவசமாக விமானம் மூலம் ஐதராபாத்திற்கு அழைத்து சென்று அங்கு உள்ள சார்மினார், மெக்கா மசூதி, சாலர்ஜங் மியூசியம், பிர்லா பாலாஜி கோயில், ஹசைன் சாகர் ஏரி, கோல்கொண்டா கோட்டை, உஸ்மானியா பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு இடங்களை சுற்றி காண்பித்து, பின்னர் விமானம் மூலம் மாணவிகள் சென்னை திரும்பினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நடேசன் பள்ளி நிர்வாகம் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News