நாலூர் ஊராட்சியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கால்பந்து போட்டி
- எச்எப்சி நண்பர்கள் குழு நடத்தும் ஐந்து வீரர்கள் பங்கு கொள்ளும் ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது
- பல்வேறு பகுதிகளில் இருந்து13 போட்டியாளர்கள் கொண்ட குழுவினர் பங்கு கொண்டனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நாலூர் ஊராட்சி இந்துஜா நகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து எச்எப்சி நண்பர்கள் குழு நடத்தும் ஐந்து வீரர்கள் பங்கு கொள்ளும் ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது.
இப்போட்டியினை எச்எப்சி குழுவின் நண்பர்கள் தலைமை வகித்து நடத்தினர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து13 போட்டியாளர்கள் கொண்ட குழுவினர் பங்கு கொண்டனர். ஆட்டத்தின் முடிவில் டொகோமோ குழுவினர் வெற்றி பெற்று வின்னர் ஆகினர். ரணராக மேலூர் செலக்ட் குழுவினர் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு பரிசு தொகையாக முதல் பரிசு அரை சவரன் தங்கநாணயம். இரண்டாம்பரிசு கால் சவரன் தங்க நாணயமும் மற்றும் கோப்பைகளையும் பிஎஸ்பி கட்சியின் பொறுப்பாளர்களான பொன்னேரி சட்டமன்ற தொகுதி தலைவர் நாலூர் மா. ஏசுதாஸ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜோதிராமலிங்கம், தொகுதி அமைப்பாளர் அமரன். சுரேஷ், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் சத்யா, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் காமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வழங்கினார்.