உள்ளூர் செய்திகள்

நத்தத்தில் கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது

Published On 2023-07-20 03:58 GMT   |   Update On 2023-07-20 03:58 GMT
  • பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது தெரிய வந்தது.
  • நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் முத்தையாவை கைது செய்தனர்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதனுக்கு நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் அதிகாரிகள் அதிரடியாக நத்தம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது நத்தம் ஆண்டியப்பபிள்ளை தெருவில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் முத்தையாவிடம் விசாரித்தனர்.

அப்போது பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் முத்தையாவை கைது செய்தனர்.

மேலும் அவர் நடத்தி வந்த கிளினிக்கையும் வருவாய் துறையினர் சீல் வைத்தனர். அங்கு நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், ஊசி, குளுக்கோஸ் உள்ளிட்டவைகளை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சிறுகுடி, செந்துறை,கோட்டையூர்,பெரியூர்பட்டி, குட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் போலி டாக்டர்கள் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து வருவதாகவும், கூடுதல் பணம் வாங்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News