உள்ளூர் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக 28 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டன.
- இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக 28 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு, பெரியார் மண் விற்பனைக்கு அல்ல என்ற போஸ்டரை ஈரோடு மாநகர பகுதி முழுவதும் ஆங்காங்கே ஒட்டியதாக மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.