பொத்தேரியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
- நிகில் கெமிக்கல் பொருளை கரைத்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
- மறைமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை செய்து வருகிறார்.
வண்டலூர்:
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தவர் நிகில். இவர் பொத்தேரியில் உள்ள ஆபோட் வேலி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.
நேற்று இரவு அவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் மற்றொரு மாணவனுக்கு போன் செய்து விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விரைந்து வந்து பார்த்த போது நிகில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிகில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மும்பையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிகில் கெமிக்கல் பொருளை கரைத்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அவர் அந்த ரசாயன கெமிக்கலை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்று உள்ளார்.
நிகிலின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது பற்றி மறைமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை செய்து வருகிறார்.