உள்ளூர் செய்திகள்

ஊரப்பாக்கத்தில் முதியவர் விபத்தில் பலி

Published On 2023-01-26 12:22 IST   |   Update On 2023-01-26 12:22:00 IST
  • அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
  • முதியவர் வலது கையில் மீன் போன்றும், இடது கையில் பறவை போன்றும் பச்சை குத்தப்பட்டு இருந்தது.

வண்டலூர்:

ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளி அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவரது வலது கையில் மீன் போன்றும், இடது கையில் பறவை போன்றும் பச்சை குத்தப்பட்டு இருந்தது.

இது குறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News