உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

Published On 2023-05-31 09:33 IST   |   Update On 2023-05-31 09:33:00 IST
  • முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை விலை 490 காசிலிருந்து 495 காசாக உயர்த்தப்பட்டது.
  • அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதால் இனிவரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை விலை 490 காசிலிருந்து 495 காசாக உயர்த்தப்பட்டது.

நாளை முதல் கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதால் இனிவரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News