உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2023-07-05 12:50 IST   |   Update On 2023-07-05 12:50:00 IST
  • மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் திருவள்ளூரில் நடைபெற உள்ளது.
  • மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்மந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் பெரிய குப்பத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் திருவள்ளூரில் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சுனில் குமார், தலைமை தாங்கி மின்நுகர்வோரிடம் மனுக்களை பெற்று தீர்வு காண்கிறார்.

எனவே, திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்மந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம் என்று திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் கனகராஜன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News