உள்ளூர் செய்திகள்

குற்றாலம் ஐந்தருவியில் மிதமான தண்ணீர்- சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

Published On 2023-06-23 12:38 IST   |   Update On 2023-06-23 12:38:00 IST
  • ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
  • ஐந்தருவி, மெயின் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தென்காசி:

தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு நேற்று குறைந்ததை அடுத்து மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவியில் 4 கிளைகளிலும் மெயின் அருவியில் மிதமான அளவிலும் தண்ணீர் கொட்டி வருவதால் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இன்று காலையில் ஐந்தருவி, மெயின் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இருப்பினும் காலை முதல் லேசான வெயில் மட்டும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் தொடர்ந்து சாரல் மழை பெய்தால் மட்டுமே குற்றால அருவிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து குற்றால சீசனும் களைகட்டும்.

Tags:    

Similar News