உள்ளூர் செய்திகள்

ஆரணியில் வருவாய் வசூல் சிறப்பு முகாம்: 102 பயனாளிகள் மூலம் ரூ.62 லட்சம் வசூல்

Published On 2023-03-19 12:47 IST   |   Update On 2023-03-19 13:14:00 IST
  • ஆரணியில் உள்ள சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் முத்திரை தாள் குறைவு கட்டண சிறப்பு முகாம் நடைபெற்றது.
  • சார் பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பத்திரப்பதிவில் கட்டண குறைவுகளை சரி செய்து கொண்டனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் உள்ள சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் முத்திரை தாள் குறைவு கட்டண சிறப்பு முகாம் நடைபெற்றது.

வருவாய் வசூல் சிறப்பு முனைப்பு இயக்கம் சார்பில் நடந்து.இந்த சிறப்பு முகாமில் ஆரணி மற்றும் ஊத்துக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பத்திரப்பதிவில் கட்டண குறைவுகளை சரி செய்து கொண்டனர். ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் 79 பயனாளிகள் கலந்து கொண்டு ரூ.55 லட்சத்து 71 ஆயிரத்து 90-ம், ஊத்துக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் 23 பயனாளிகள் கலந்து கொண்டு ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்து 190-ம் செலுத்தி தங்களது கட்டண குறைவுகளை சரி செய்து கொண்டனர்.ஆக மொத்தம் இம்முகாமில் 102 பயனாளிகள் கலந்து கொண்டு மொத்தம் ரூ.62 லட்சத்து 19 ஆயிரத்து 280 வசூல் ஆனது.டி.ஆர்.ஓ சாரதா ருக்மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பத்திரபதிவுத்துறை தனித் தாசில்தார் தமிழ்ச்செல்வன், ஆரணி சார்பதிவாளர் பாலாஜி,ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பத்திரப்பதிவு குறைவுகளை நிறைவு செய்தனர்.

Tags:    

Similar News