உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே கைப்பந்து போட்டியில் கோஷ்டி மோதல்- 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-05-03 17:15 IST   |   Update On 2023-05-03 17:15:00 IST
  • பெரும்பேடு குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டு வந்திருந்த மீஞ்சூர் அடுத்த நாலூரை சேர்ந்த காமேஷ், தீபக் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
  • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து லட்சுமிபுரம் பகுதி சேர்ந்த அஜித்,சூர்யா,ரஞ்சித், விஜய் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பெரும்பேடு குப்பத்தில் மே தினத்தை முன்னிட்டு கைப்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும், லட்சுமிபுரத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினருனம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதன்தொடர்ச்சியாக பெரும்பேடு குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டு வந்திருந்த மீஞ்சூர் அடுத்த நாலூரை சேர்ந்த காமேஷ், தீபக் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த இருவரும் மேல் சிகிச்சைகாக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொன்னேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து லட்சுமிபுரம் பகுதி சேர்ந்த அஜித்,சூர்யா,ரஞ்சித், விஜய் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் சிலரை தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News