அடையாறில் இருந்து மாமல்லபுரத்துக்கு மீண்டும் மாநகர ஏ.சி. பஸ்கள் இயக்கம்
- பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மாமல்லபுரத்துக்கு மாநகர ஏ.சி.பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் முக்கிய சுற்றுலாதலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்த்து ரசிக்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மாமல்லபுரத்துக்கு மாநகர ஏ.சி.பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஏற்கனவே சென்னை பிராட்வே, கோயம்பேடு, தி.நகர், அடையாறு பகுதியில் இருந்து மாமல்லபுரத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோடைகால விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி, விஷேச நாட்களில் மாநகர ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் போதிய வருவாய் இல்லாததால் அந்த பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு மாநகர ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மாநகர ஏ.சி. பஸ் இயக்க, போக்குவரத்து துறை முடிவு செய்து நேற்று முதல் இயக்கப்படுகிறது.
பயணிகளின் வரவேற்பை பொறுத்து அனைத்து நாட்களிலும் மற்றும் பிராட்வே, கோயம்பேட்டில் இருந்து ஏ.சி. மாநகர பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.