உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் அருகே சென்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு

Published On 2022-11-27 12:05 IST   |   Update On 2022-11-27 12:05:00 IST
  • 2 வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ஊள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டில் நேற்று இரவு கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். அதேபகுதியை சேர்ந்தவர் குப்புராஜ், முன்னாள் ராணுவ வீரர். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை அறையில் இருந்த உண்டியல் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து புகாரின் பேரில் கொண்டபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News