உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்- வேட்புமனு தாக்கல் நிறைவு
- வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.
- இரண்டாம் நாள் முடிவில் மொத்தம் 222 பேரிடம் இருந்து மனுத்தாக்கல் பெறப்பட்டது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் நாளில் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாளான நேற்று 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இரண்டாம் நாள் முடிவில் மொத்தம் 222 பேரிடம் இருந்து மனுத்தாக்கல் பெறப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து 221 பேர் எடப்பாடி பழனிசாமி பேரில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.