உள்ளூர் செய்திகள்
அச்சரப்பாக்கம் அருகே லாரி மோதி பெண் பலி
நொலம்பூர் கிராமத்திற்குட்பட்ட மேலபுதுகாலனியை சேர்ந்தவர் துலுக்காணம்.
மதுராந்தகம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, நொலம்பூர் கிராமத்திற்குட்பட்ட மேலபுதுகாலனியை சேர்ந்தவர் துலுக்காணம். இவரது மனைவி காந்தா (வயது 60). இவர் அச்சரப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கசாவடி அருகே சாலையோரமாக பலாப்பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இன்று காலை 6.15 மணிக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி காந்தா மீது மோதியது. இதில் காந்தா சம்பவ இடத்திலேயே பலியானார்.