உள்ளூர் செய்திகள்
ஆவடியில் 6 மாத கர்ப்பிணிப் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- சித்ரா திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆவடி:
போரூரை சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி சித்ரா (வயது 25). இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது சித்ரா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் சித்ராவின் 10 பவுன் நகைகளை கணவர் சேதுபதி அடகு வைத்ததாக தெரிகிறது.
அதனை மீட்டு தரும்படி சித்ரா கணவரிடம் கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சித்ரா, ஆவடி, சிரஞ்சீவி நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார். மனவேதனையில் இருந்த சித்ரா திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.