உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூர் கடலில் குளித்த 3 சிறுவர்கள்-சிறுமி மாயம்

Published On 2022-08-14 15:13 IST   |   Update On 2022-08-14 15:13:00 IST
  • கடலில் மூழ்கிய 3 சிறுவர்கள் மற்றும் சிறுமியை பற்றியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் உறவினர்கள் கடற்கரையில் சோகத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்.
  • திருவொற்றியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடலில் மூழ்கிய 4 பேரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் கரீம் மொய்தீன். இவரது குடும்பத்தினர் 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் இன்று காலை 9 மணிக்கு திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே கடலில் குளிக்க வந்தனர்.

அனைவரும் கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று கடலில் ராட்சத அலை எழுந்தது.

இதில் குளித்துக்கொண்டிருந்த கபீர் (வயது24), சிறுமி அம்ரீன் (வயது18), ஆபான் (வயது14), அவர்களது நண்பர் சபரி (வயது16) ஆகிய 4 பேரை அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

அருகில் இருந்த உறவினர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் அவர்கள் அலறிதுடித்தனர். இதனை கண்ட அருகில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கடலில் மூழ்கிய 3 சிறுவர்கள் மற்றும் சிறுமியை பற்றியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் உறவினர்கள் கடற்கரையில் சோகத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்.

திருவொற்றியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடலில் மூழ்கிய 4 பேரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News