உள்ளூர் செய்திகள்
ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது
- பொன்பாடி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- ராஜூ, தேனியை சேர்ந்த சுரேஷ் பாண்டியன் ஆகியோர் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
திருத்தணியை அடுத்த பொன்பாடி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் இருந்து வந்த பஸ்சில் சோதனை செய்தபோது அதில் இருந்த விருதுநகரை சேர்ந்த முருகானந்தம், திருப்பூரை சேர்ந்த ராஜூ, தேனியை சேர்ந்த சுரேஷ் பாண்டியன் ஆகியோர் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.