உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே 3 கடைகள் உடைப்பு- மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2023-03-11 16:11 IST   |   Update On 2023-03-11 16:11:00 IST
  • சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன.
  • அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடைகளை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

சிதம்பரம்:

என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள வளையமாதேவி கிராமத்தில் பணிகள் தொடங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின.

சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் டீக்கடை மீது கல் வீசி தாக்கினார்கள். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மேலும், 2 கடைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் அந்த மர்மகும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடைகளை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News