உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு
- திருவள்ளூரை அடுத்த ஈக்காடு வி.கே.என்.நகர் முதல் தெருவில் வசிப்பவர் தமிழரசன்.
- போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு வி.கே.என்.நகர் முதல் தெருவில் வசிப்பவர் தமிழரசன். இவர் தனது வீட்டு முன்பு 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தார். நேற்று நள்ளிரவு 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் திடீரென தீப்பற்றி எரிந்தன. சத்தம் கேட்டு தமிழரசன் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள்கள் பற்றி எரிவதை கண்டு அதிர்ச்ச அடைந்தார். சிறிது நேரத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.