உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் நில உரிமையாளரை காரில் கடத்தி சொத்தை அபகரிக்க முயற்சி- 3 பேர் கைது

Published On 2022-11-09 11:57 IST   |   Update On 2022-11-09 11:57:00 IST
  • வி.சி.க. பிரமுகர் செல்லப்பன், ஜமாலுதீன், விஜயபாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
  • கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம்:

தஞ்சை மதினா வடக்கு தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன் (வயது 52). சென்னையில் உள்ளார். இவர் சிதம்பரம் வடக்கு ரதவீதி கே.கே.சி. தெருவில் வசித்து வரும் ஜமாலுதீன் என்பவருக்கு சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார்.

அந்த வீட்டை அவர் காஜாமைதீனுக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். ஆனால், அந்த வீட்டை ஜமாலுதீன் ஒப்படைக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாலுதீன் சென்னைக்கு சென்று காஜாமைதீனிடம் தனக்கு தருமாறு கேட்டார். ஆனால், காஜாமைதீன் மறுத்து விட்டார்.

எனவே, ஆத்திரம் அடைந்த ஜமாலுதீன், காஜாமைதீனை காரில் கடத்தி வந்து சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள லாட்ஜில் அடைத்தனர்.

இது தொடர்பாக காஜாமைதீன் செல்போன் மூலம் தனது மனைவிக்கு பேசியுள்ளார். அவர் ஆன்லைன் மூலம் போலீசுக்கு புகார் செய்தார்.

அதன் பேரில் சென்னை நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு சிதம்பரம் பகுதிக்குட்பட்டதால் அங்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக ஜமாலுதீன், ரபீக், சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற வி.சி.க. செயலாளர் செல்லப்பன், விஜயபாஸ்கர், செந்தில், நடனம், நடராஜ், ரவீந்திரன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் வி.சி.க. பிரமுகர் செல்லப்பன், ஜமாலுதீன், விஜயபாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில் காஜாமைதீனிடம் விற்கப்பட்ட வீட்டை புதுவையை சேர்ந்தவருக்கு ரூ.2 கோடிக்கு விலை பேசியது தெரிய வந்தது.

கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News