உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அருகே இடி தாக்கி 20 ஆடுகள் பலி

Published On 2023-09-02 07:51 GMT   |   Update On 2023-09-02 07:51 GMT
  • ஆட்டுப்பட்டி மீது இடி தாக்கியதில் அதிலிருந்த 16 செம்மறியாடுகள், 4 வெள்ளாடுகள் பரிதாபகமாக உயிர் இழந்தன.
  • இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர் மூலம் உடல் கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் புதைத்தனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி அய்யந்துறை (47). கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் நேற்று மாலை வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு உறங்க சென்றார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. நள்ளிரவு 1 மணியளவில் ஆட்டுப்பட்டி மீது இடி தாக்கியதில் அதிலிருந்த 16 செம்மறியாடுகள், 4 வெள்ளாடுகள் பரிதாபகமாக உயிர் இழந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர் மூலம் உடல் கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் புதைத்தனர். மேலும் காயம் அடைந்த ஆடுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இறந்து போன ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்றும், இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News