உள்ளூர் செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது
- எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர சோதனை மேற் கொண்டனர்.
- அரசு பேருந்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது இரண்டு பைகளில் 25 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர சோதனை மேற் கொண்டனர்.
அப்போது அவ்வழியாக நெல்லூரில் இருந்து சென்னைக்கு செல்லும் தமிழக அரசு பேருந்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது இரண்டு பைகளில் 25 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாசாணம் (35), பழைய தாராபுரம் ரோடு பழனிபரத் குமார் (28) ஆகியோர் கஞ்சா கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் இருந்து எளாவூர் சோதனை சாவடி வழியாக கஞ்சா கடத்துவது வாடிக்கையாக உள்ளதால் கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு சவாலாக உள்ளது.