உள்ளூர் செய்திகள்
குட்கா பதுக்கி விற்ற 2 பேர் கைது
- ஒரு கடையில் சோதனை நடத்தியபோது குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
- கடையின் உரிமையாளர் தங்கதுரை, சிவலிங்கம் .ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்:
வண்டலூர் அடுத்த பொத்தேரி பாரதியார் தெருவில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஒரு கடையில் சோதனை நடத்தியபோது அங்கு மூட்டை முட்டைகளாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. சுமார் 210 கிலோ குட்கா, புகையிலையை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் தங்கதுரை, சிவலிங்கம் .ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.