உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 1150 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-07-05 12:29 IST   |   Update On 2022-07-05 12:29:00 IST
  • 23 மூட்டைகளில் மொத்தம் 1150 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
  • ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பெரிய காஞ்சிபுரம் புத்தேரியை சேர்ந்த பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவல்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் கண்காணிப்பாளர் கீதா, காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையில் காஞ்சிபுரம்-அரக்கோணம் ரோட்டில் பாரதி ரோட்வேஸ் அருகில் இருந்த முட்புதரில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகளில் மொத்தம் 1150 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பெரிய காஞ்சிபுரம் புத்தேரியை சேர்ந்த பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News