உள்ளூர் செய்திகள்

தமிழக ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழக ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

Published On 2022-12-03 15:08 IST   |   Update On 2022-12-03 15:08:00 IST
  • நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் கோப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை.
  • அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை திட்டப்–பணிகள் ரூ.288 கோடியில் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் இந்திரசித்தன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் செந்தில்நாதன், செயலாளர் புயல் குமார், பொருளாளர் மதியரசு, மகளரணி செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் அண்ணாத்துரை தீர்மானங்களை விளக்கி பேசினார்.

கூட்டத்தில், திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் ஐபெட்டோ பவளவிழா எழுச்சி மாநாட்டில் திரளாக பங்கேற்பது, மாவட்ட கல்வி அலுவலகத்தில் நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் கோப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகஸ்தியன் பள்ளி - திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை திட்டப்பணிகள் ரூ.288 கோடியில் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரெயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதில் சங்க உறுப்பினர்கள் அம்பிகாநிதி, நீலமேகம், சேகர், ஆனந்த் முருகு, பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் குமரவேலவன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News