உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க முப்பெரும் விழா நடந்தது.

தஞ்சையில், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க முப்பெரும் விழா

Published On 2022-12-24 10:04 GMT   |   Update On 2022-12-24 10:04 GMT
  • 75 மற்றும் 80 வயது நிறைவு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு.
  • குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை ரூ.1000 ஆக வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் இன்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தினம், ஆண்டு விழா , 75 மற்றும் 80 அகவை நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சீனி .அய்யாகண்ணு தலைமை தாங்கினார்.

மாநில துணை பொது செயலாளர் ஜெகதீசன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் ஞானசேகர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் டாக்டர் சேதுராமன் ஆண்டு அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.

மாநிலத் தலைவர் சீதாராமன், மாநில பொது செயலாளர் மருதை ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில செயலாளர் ஜாகிர் உசேன், மாநில மகளிர் அணி செயலாளர் ரேணுகா, அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் ராஜராஜன், திருவாரூர் மாவட்ட தலைவர் முருகானந்தம், கருவூலர் கணக்கு துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் மகேஸ்வர், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் ராசமாணிக்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், மாநில தணிக்கையாளர் பாலசுப்ரமணியன், பட்டுக்கோட்டை வட்டக் கிளை தலைவர் ரெஜினால்டு செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த விழாவில் 75 மற்றும் 80 அகவை நிறைவு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கருவூல அலுவலர் (பொ) மீனாட்சி பரிசு வழங்கி பாராட்டினார்.

இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மத்திய அரசு 1-7-2022 முதல் வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படியை அதே தேதியில் இருந்து உடன் அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 21 மாத கால 14 சதவீத அகவிலைப்படியையும் 1-1-2022 முதல் 1-7-2022 வரை வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி நிலுவையையும் உடன் வழங்க வேண்டும்.

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்து மருத்துவ செலவு தொகையை முழுவதுமாக வழங்க வேண்டும். கண்புரை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் அனுமதிக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் இறந்தால் குடும்ப நல நிதியாக ரூ.2 லட்சமாக வழங்க வேண்டும்.

மத்திய அரசு வழங்குவது போல் தமிழக அரசும் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை ரூ.1000-ஆக வழங்க வேண்டும். ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும், அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோபாலகிருட்டிணன், எஸ்தர் தாஸ், தஞ்சை ராமதாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் வசந்தா நன்றி கூறினார்.

Tags:    

Similar News