உள்ளூர் செய்திகள்

அரசு பெண்கள் பள்ளியில் முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ. அன்பழகன் மேசைகளை வழங்கிய காட்சி .

காரிமங்கலம் அரசு பள்ளிகளில் மேசை வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-07-22 15:17 IST   |   Update On 2023-07-22 15:17:00 IST
  • அரசு பள்ளிகளில் சிதலமடைந்து காணப்படும் மேசை உள்பட உபகரணங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதை தவிர்க்க எம்.எல்.ஏ. நிதியில் இருந்து புதிதாக மேசை உள்பட உபகரணங்களை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வழங்கி வருகின்றனர்.
  • காரிமங்கலம் அரசு பள்ளிகளில் மேசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் பள்ளி மற்றும் அனுமந்தபுரம் உட்பட 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பில் மாணவ மாணவிகள் உட்காருவதற்காக 220 மேசை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமை வகித்து மேசைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் காவேரி, பி. டி.ஏ பொரு–ளாளர் செந்தில் குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் சந்திரன், முருகன் அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவம், வக்கீல் பெரியசாமி, பாரதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News