உள்ளூர் செய்திகள்

தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி வெங்கடேஷ்வரன் மரக்கன்றுகளை நடவு செய்த போது எடுத்த படம்.

அதியமான் கோட்டையில் தூய்மையே சேவை திட்ட பணி முகாம்

Published On 2023-09-26 15:49 IST   |   Update On 2023-09-26 15:49:00 IST
  • அதியமான் கோட்டையில் தூய்மையே சேவை திட்ட பணியை எம். ஏல்.ஏ துவக்கி வைத்தார்.
  • மரக்கன்றுகள் நடவு செய்யும் முறை பற்றி விளக்கப்பட்டது

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் வள்ளல் அதியமான் கோட்டம் அமைந்துள்ளது. இங்கு நேரு யுகேந்திரா சார்பில் தூய்மையே சேவை திட்ட பணி முகாம் இன்று தொடங்கியது.இதில் சிறப்பு விருந்தினராக தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டார்.

இதில் அவர் இந்த திட்டத்தின் நோக்கம் குறித்தும், நம்முடைய பகுதிகளை தூய்மையாக சுத்தமாக எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், மாணவ மாணவிகளிடையே உரையாற்றினர்.

மேலும் மத்திய அரசின் என் மண் என் தேசம் என்ற தலைப்பில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மண் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியின் தொடக்கமும் அதியமான் கோட்டை பகுதியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்திய ஒருமைப்பா ட்டிற்காக பாடுபட்ட தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அதியமான் கோட்டம் வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்திற்க்காக தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் மரக்கன்றுகளை நட்டு எவ்வாறு பராமரிப்பது என அறிவுரை வழங்கியதோடு நிறுத்தாமல் மண் வெட்டி யுடன் களத்தில் இறங்கி மாணவ,மாணவிகளுக்கு செய்து காட்டினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் அதியமான் கோட்டை கிராம வளர்ச்சி குழு உறுப்பினர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News