தகட்டூரில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
- கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
- முடிவில் தி.மு.க. பிரமுகர் பலராமன நன்றி கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தகட்டூர் ராமகோவி ந்தன்காட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழா, கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில விவசாய அணி துணை தலைவருமான வேதரத்தினம், நகர்மன்ற தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலா ளர் அணி கோவிந்தசாமி அனைவ ரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து, தி.மு.க. கிளை செயலாளர் ராஜதுரை தி.மு.க. கொடியேற்றினார். இதில் அவை தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரிபாலன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், மாவட்ட செயலாளர் கவுதமன் பொது மக்களுக்கு மரக்கன்றுகளும், புடவை, வேஷ்டிகள் வழங்கி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முடிவில் தி.மு.க. பிரமுகர் பலராமன நன்றி கூறினார்.