உள்ளூர் செய்திகள்

தில்லையம்பூர் முதியோர் காப்பகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

முதியோர் காப்பகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

Published On 2023-02-13 08:15 GMT   |   Update On 2023-02-13 08:15 GMT
  • 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் வழங்கல்.
  • காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறினர்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருப்பாலைத்துறை ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிறுவனர் ஓ.எஸ்.ஜெ. சார்பாக தில்லையம்பூர் முதியோர் காப்பகத்திற்கு அரிசி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாக இயக்குனர் சித்தார்த்தன், பள்ளி முதல்வர் செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் முதியோர் காப்பகத்திற்கு சென்று ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, உள்பட 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் ஆகியவற்றை முதியோர் இல்ல நிர்வாகியும், காப்பாளருமான எஞ்ஜினியர் நடராஜனிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பேசும்போது, பிறருக்கு உதவும் மனப்பாண்மை நாம் வளர்த்து கொண்டு மற்றவர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து உதவ வேண்டுமென மாணவர்களை கேட்டுக்கொண்டனர்.

இறுதியில் முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News