உள்ளூர் செய்திகள்

கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

பல்லடத்தில் சாலை விரிவாக்க பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

Published On 2023-06-26 10:04 IST   |   Update On 2023-06-26 10:04:00 IST
  • சாலையின் தரம்
  • நான்கு வழி சாலையாக

பல்லடம்: தமிழக நெடுஞ்சாலை துறையின் திருப்பூர் கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் மாநில நெடுஞ்சாலை பல்லடத்திலிருந்து தாராபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பல்லடத்தில் இருந்து புத்தரச்சல் வரை 11.80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரு வழி சாலையை ரூ.115 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும்பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் தரம் மற்றும் பணிகள் குறித்து திருப்பூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது திருப்பூர் கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா,பல்லடம் உதவி பொறியாளர் பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News