உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பொருட்களுக்கு பில் போட கலெக்டர் தீபக் ஜேக்கப், மக்களுடன் வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

கிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் மக்களோடு, மக்களாக வரிசையில் நின்ற கலெக்டர்

Published On 2023-03-27 09:49 GMT   |   Update On 2023-03-27 09:49 GMT
  • சிறிது நேரத்திற்கு பிறகே அங்கிருந்த சிலர் வரிசையில் நிற்பது கலெக்டர் என்பதை அறிந்து அவரை முன்னால் செல்ல கேட்டுக் கொண்டனர்.
  • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் இந்த எளிமை அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்கிய கலெக்டர், மக்களோடு வரிசையில் நின்று பொருட்களுக்கு பில் போட்டு கலெக்டர் தொகையை செலுத்தி சென்றார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக தீபக் ஜேக்கப், கடந்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதி பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் வந்தார். அங்கு பொருட்களை வைக்க கூடிய கூடையை எடுத்து பல்வேறு பொருட்களை தேர்ந்தெடுத்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்றார்.

சிறிது நேரத்திற்கு பிறகே அங்கிருந்த சிலர் வரிசையில் நிற்பது கலெக்டர் என்பதை அறிந்து அவரை முன்னால் செல்ல கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவரோ அனைவருடனும் வரிசையில் நின்று பொருட்களுக்கு பில் போட்டு விட்டு தொகையை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து சென்றார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் இந்த எளிமை அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News