உள்ளூர் செய்திகள்

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை

Published On 2023-07-27 15:31 IST   |   Update On 2023-07-27 15:31:00 IST
  • பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் யானை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தரு ளினார்.
  • தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.

தருமபுரி, 

ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள அன்னை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்றது.

விழாவையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றது.

பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் யானை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தரு ளினார். இதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.

பின்னர் ஆனந்த நடராஜர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சோடச உபசாரம், வேத பாராயணம், பஞ்ச புராண பாராயணம் மற்றும் மஹா தீபாராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News