மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் மாணவிகள் போதை விழிப்புனர்வு உறுதிமொழி நடந்தது.
மாணவிகள் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
- செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
- முதலமைச்சர் கொண்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு மாணவர்களாகிய நீங்கள் தான் விழிப்புணர்வை எல்லோருடைய மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும்.
மயிலாடுதுறை :
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் லலிதா, முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. போதைப்பொருள் என்பது வாழ்க்கையை சீரளிக்கும், உடலை அழிக்கக்கூடியது, எதிர்காலத்தை வீணடிக்கும், இந்த போதைப்பழக்கத்தில் உள்ளவர்களை நாம் அனைவரும் ஒன்றிைணந்து திருத்த வேண்டும். குறிப்பாக நீங்கள் முன்னோடியாக இருந்து போதைப் பழக்கத்தில் உள்ளவர்களை அதிலிருந்து விடுபட சொல்லித்தர வேண்டும்.
அப்படி யாராவது இருந்தால் நல்வழியில் கொண்டு வர முன்வர வேண்டும். உங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக கொண்டுவர நீங்கள் பாடுபட வேண்டும். முதலமைச்சர் கொண்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு மாணவர்களாகிய நீங்கள் தான் விழிப்புணர்வை எல்லோருடைய மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதி மொழியை ஒரு நாள், ஒரு வாரம் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகா, தலைமை ஆசிரியை லீமா ரோஸ் மற்றும் 1300-க்கும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.