உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான தடகள போட்டிகளில் தகுதியான மாணவர்கள்.

மாநில தடகள போட்டிக்கு சீர்காழி பள்ளி மாணவர்கள் தகுதி

Published On 2022-11-28 08:12 GMT   |   Update On 2022-11-28 08:12 GMT
  • 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.
  • சீர்காழி ரெயில் நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

சீர்காழி:

தரங்கம்பாடி தாலுகா, பொறையார் காட்டுசேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்று முடிந்த மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் 100 மீ ஓட்டப்போட்டி, 200 மீ ஓட்டப்போட்டி, 400 மீ ஓட்டப்போட்டி, 100 மீ தட ஓட்டம், 400 மீ தடை ஓட்டம், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எரிதல், வட்டு எறிதல் , ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல், 100 மீ அஞ்சல் ஓட்ட போட்டி, 400 மீ ஓட்ட போட்டி, ஆகிய அனைத்துப் போட்டிகளிலும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 14 வயது உட்பட்ட பிரிவு, 17 வயது உட்பட்ட பிரிவு, 19 வயது உட்பட்ட பிரிவு மாணவர்கள் இப்பள்ளியிலிருந்து குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.

இவ்வீரர்களிலிருந்து 24 மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெறக்கூடிய தமிழக அரசின் பள்ளிக்க ல்வித்துறை சார்பில் 63வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள செயற்கை இழையிலான நவீன விளையாட்டு மைதானத்தில் நடைபெறக்கூடிய போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

குறிப்பாக இப்பள்ளியைச் சார்ந்த கிருத்திகா, பவித்ரா, ஜெனிஷா, நிஷாந்தி, கிருத்திகா, அஜய் குமார், சக்திவேல், பென்னி ஆகிய மாணவர்கள் மூன்று போட்டிக்கு மேலாக வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

இந்த மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் ஆகியோர்களை பள்ளியின் முன்னாள் செயலர் பாலசுப்பிரமணிய முதலியார், பள்ளியின் செயலர் இராமகிருஷ்ண முதலியார், பள்ளியின் குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையா சிரியர் அறிவுடை நம்பி சீர்காழி புகைவண்டி நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

மாணவர்களை உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், வரதராஜன் மற்றும் பள்ளியைச் சார்ந்த இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News